புவியிலுள்ள ஒவ்வொரு பொருளும் புவியை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இதற்கு ஈர்ப்பியல் விசை எனப் பெயர். இதை கண்டறிந்தவர் ______
ஐசக் நியூட்டன்
அப்துல்கலாம்
சர்.சி.வி. இராமன்
கலீலியோ
ஒரு பொருள் ஓய்வு நிலையிலோ அல்லது இயக்க நிலையையோ மாற்றாமல் இருப்பதற்கு அதன் மீது செயல்படும் _______ விசையே காரணம்
சமமற்ற
சமமான
ஒரே திசையில் செயல்படும்
அழுத்தி வைக்கப்படும்
கீழ்க்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாவது விதிப்படி இயங்காதது எது என தேர்ந்தெடுத்து எழுது___
நகரும் மிதிவண்டி
வானூர்தி
மின்மோட்டார்
நகரும் படம்
சந்திராயன் திட்டம் பாரதத்தை உலகளவில் நிமிர்ந்து பார்க்க வைத்தது எனில், தமிழகத்தை தலை நிமிர வைக்க காரணமாக இருந்த இத்திட்டதின் இயக்குநர் கீழே கொடுக்கப்பட்டவர்களில் யார்?
எம்.ஜி.ஆர்.
மயில்சாமி அண்ணாதுரை
வெற்றி வேந்தன்
விசையின் அலகு ______
நியூட்டன்
m s-1
kg m s-2
kg m s-1
சந்திராயன் - I பற்றி கருத்தில் எது சரியாகப் பொருந்தும்?
இந்தியாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட ராக்கெட்
இந்தியாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்களைக் கொண்ட விண்கலன்
இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்
நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாவி
ஒருபொருள் தனது நிலையை மாற்றிக் கொள்ள காரணமாவது ________
நிலையற்ற தன்மை
அதன் இயற்கை தன்மை
சமமான உள்விசை
சமமற்ற புறவிசை
சமமற்ற விசைகள் ஒரு பெட்டியின் மீது செயல்படும்போது, பெட்டியானது நகரும் திசை ______
தொகுபயனின் திசை
தொகுபயனுக்கு எதிர்திசை
அதிக மதிப்புள்ள விசை
தொகுபயனின் செங்குத்து திசை
விசையை விளக்க ______ செயல்பாடுகள் பயன்படுகிறது
தள்ளுதல்
இழுத்தல்
உதைத்தல்
இவை மூன்றில் ஏதேனும் ஒன்று
குறிப்பிட்ட இடத்தில் g - ன் மதிப்பு மாறிலி எனினும் அது மாறுபடும் காரணிகள் எவையெவை?
இடத்திற்கு இடம்
குத்துயரம்
புவிப்பரப்பிலிருந்து ஆழம்
இம்மூன்றும்