Topics |
---|
Part - I
1. அடிப்படை அறிவியலான இயற்பியல் பற்றி கூறு?
அடிப்படை அறிவியலான இயற்பியல், இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகளை விளக்குகிறது. இது அளந்தறியப்படும் அறிவியல் ஆகும். எனவே இயற்பியல் பொருள்களை அளக்கிறது. இயற்பியலில் எந்த ஒரு தத்துவமும் உற்று நோக்கிய மற்றும் அளந்தறியப்பட்ட நிகழ்வுகளுடன் ஒத்துப்போக வேண்டும். இயற்பியலால் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு அளத்தல் கருவிகளும். அளவை முறைகளும் மற்ற அறிவியல் பிரிவுகளுக்கும், சமுதாயத்திற்கும் இயற்பியலில் மிகப்பெரிய கொடை எனலாம்.
2. திருகு அளவியின் வெளித்தோற்றம் பற்றி கூறு
மிகச் சிறிய பொருள்களின் பரிமாணங்களை 0.001 செ.மீ அளவுக்குத் துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி திருகு அளவி ஆகும். திருகு அளவியில் 'U' வடிவ உலோகச் சட்டம் உள்ளது. இச்சட்டத்தின் ஒரு புறம் உள்ளீடற்ற ஓர் உலோக உருளை பொருத்தப்பட்டுள்ளது
உருளையின் மேற்புறத்தில் திருகின் அச்சுக்கு இணையாக மில்லிமீட்டர் அளவுகள் குறிக்கப்பட்டட அளவுகோல் உள்ளது. இது புரிக்கோல் எனப்படும். 100 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட தலைக்கோல் அமைப்பும் உள்ளது.
3. திருகு அளவியின் உட்புறத்தோற்றம் பற்றி கூறு
உருளையின் உட்புறம் புரிகள் செதுக்கப்பட்டிருக்கும். புரியினுள் திருகு ஒன்று இயங்குகிறது. திருகின் தலைப்பகுதியோடு உள்ளீடற்ற உருளையொன்று இணைக்கப்பட்டுள்ளது. அதன் குவிந்த முனை 100 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, இது தலைக்கோல் எனப்படும்.
திருகின் மறுமுனை சமதளமாக உள்ளது. அதற்கு நேர் எதிரில் அதன் பரப்புக்கு இணையாகக் குமிழ் ஒன்று உள்ளது.
4. திருகு அளவியின் தத்துவம் குறித்து எழுது
திருகு அளவி திருகுத் தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது, நிலையான மரைக்குள் இயங்கும் திருகைக் சுற்றும் போது, அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு சுற்றப்பட்ட சுற்றுகளின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்,
இயற்பியலால் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு அளத்தல் கருவிகளில் திருகு அளவியும் முக்கியமானதாகும்.
5. புரியிடைத் தூரம் என்றால் என்ன?
ஒரு முழுச் சுற்றுக்குத் திருகின் முனை நகரும் தொலைவு, இரு அடுத்தடுத்த புரிகளுக்கிடையே உள்ள தொலைவுக்குச் சமம் இது புரியிடைத் தூரம் எனப்படும்.
புரிக்கோலில் திருகு நகர்ந்த தொலைவு
புரியிடைத் தூாரம்=_______________________________________
தலைக்கோல் சுற்றிய சுற்றுகளின் எண்ணிக்கை
6. திருகு அளவியின் மீச்சிற்றளவு பற்றி கூறு
திருகின் தலைப்பகுதி தலைக்கோலின் ஒரு பிரிவு அளவிற்கு சுற்றப்படும் போது திருகின் முனை நகரும் தூரம் திருகு அளவியின் மீச்சிற்றளவு ஆகும்.
புரியிடைத்தூரம்
மீச்சிற்றளவு = ______________________
தலைக்கோல் பிரிவுகளின் எண்ணிக்கை
7. திருகு அளவியின் சுழிப்பிழை குறித்து எழுது
திருகு முனையின் சமதளபரப்பும் எதிரேயுள் குமிழின் சமதளப் பரப்பும் இணையும் போது தலைக்கோலின் சுழிப்பிரிவு, புரிக்கோலின் வரைகோட்டுடன் இணைந்தால் சுழிப்பிழை ஏதுமில்லை.
8. திருகு அளவியின் நேர்பிழை குறித்து எழுது
குமிழோடு திருகின் முனை இணையும்போது, தலைக்கோலின் சுழிப்பிரிவு புரிக்கோலில் வரைகோட்டுக்கும் கீழ் அமைந்தால் பிழை நேர்பிழை எனப்படும். தலைக்கோலின n- ஆவதுபிரிவு புரிகோலின் வரை கோட்டுடன் இணைந்தால் பிழை நேர்பிழை ஆகும்.
Z.E=+(nxL.C)
சுழித் திருத்தம்
Z.C=-(nxL.C)
9. திருகு அளவியின் எதிர்ப்பிழை குறித்து எழுதுக
குமிழோடு திருகின் முனை இணையும் போது, தலைக்கோலின் சுழிப்பிரிவு புரிக்கோலின் வரைக்கோட்டுக்கு மேல் அமைந்தால் பிழை எதிர்ப்பிழை எனப்படும், தலைக்கோலின் n-ஆவது பிரிவு புரிக்கோலின் வரைக்கோட்டுடன் இணைந்தால்பிழை எதிர்ப் பிழை ஆகும்.
Z.E=-(100-n)xL.C
சுழித் திருத்தம்
Z.C=+(100-n)xL.C
10. மிக நீண்ட தொலைவுகளை அளக்க பயன்படுத்தும் அலகுகள் குறித்து எழுது
புவியில் இருந்து நிலவு அல்லது கோள் ஒன்றின் தொலைவு போன்ற நீண்ட தொலைவுகளைக் கணக்கிட, சிறப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. ரேடியோ எதிரொளிப்பு முறை லேசர் துடிப்பு முறை இடமாற்றுத் தோற்ற முறை போன்றவை மிக நீண்ட தொலைவுகளைக் கணக்கிட பயன்படுகின்றன. அத்தகைய நீண்ட தொலைவுகளைக் கணக்கிட வானியல் அலகு மற்றும் ஒளி ஆண்டு போன்ற அலகுகள் பயன்படுகின்றன.
11. ஒளி ஆண்டு குறிப்பு வரைக
ஒளியானது, வெற்றிடத்தில் ஒர் ஆண்டில் செல்லக்கூடிய தொலைவு ஒளி ஆண்ட எனப்படும்.
வெற்றிடத்தில் ஒரு ஆண்டில் ஒளி கடந்த தொலைவு =ஒளியின் திசைவேகம் x 1ஆண்டு
ஃ1 ஒளி ஆண்டு=3x108ms-1x 1 ஆண்டு (நொடிகளில்)
=3x108x365.25x24x60x60
=9.467x1015m
12. வானியல் அலகு மற்றும் ஒளியின் அளவு பற்றி கூறு
வானியல் அலகு
புவியின் மையத்திலிருந்து சூரியனின் மையம் வரை உள்ள சராசரித் தொலைவு வானியல் அலகு எனப்படும்.
1 வானியல் அலகு (AU)=1.496x1011m
ஒளியின் அளவு
SIமுறையில் ஒளியின் செறிவை அளக்கப் பயன்படும் அலகு கேண்டிலா ஆகும். எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளிவிடும் ஒளியின் செறிவு தோராயமாக ஒரு கேண்டிலாவுக்குச் சமம்.
13. ஏன் அளவீடுகள் துல்லியமாக இருத்தல் வேண்டும்?
நாம் நமது வண்டிகளுக்குப் பெட்ரோல் நிரப்பும்போது குறிப்பிட்ட ஒரே தொகைக்குச் சில இடங்களில் அளவீடுகள் இரு இலக்கங்களிலும் (எடுத்துக்காட்டாக 1.9லிட்டர்) வேறுசில இடங்களில் மூன்று இலக்கங்களிலும் (எடுத்துக்காட்டாக 1.92லிட்டர்) அமைந்துள்ளது. இத்தகைய துல்லிய அளவீட்டினை மின்னனுக் கருவிகளின் மூலமே அளவிட முடியும்.