Back to home

Topics



1.கரைசல்கள் நம் அன்றாட வாழ்வில் மிக இன்றியமையாதது என்பதை விளக்கு.
மனித உடலில் உணவின் தன்மயமாதல் கரைசல் (நீர்ம) முறையிலேயே நடைபெறுகிறது. மனிதனின் அன்றாட உடற்செயல்களுக்கேற்ப இரத்தம், நிணநீர் ஆகியவை நீர்ம நிலையிலேயே உள்ளன.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் சேர்ந்த ஒருபடித்தான கலவையே கரைசல் ஆகும். கரைசல் என்பதை கீழ்வருமாறு குறிப்பிடலாம்.

கரைபொருள் + கரைப்பான் = கரைசல்
உப்பு + நீர் = உப்புக்கரைசல்

2. கரைசல் பற்றி சிறுகுறிப்பு வரைக.
கரைசல் என்பது கரைபொருள் கரைப்பான்களால் ஆன ஒருபடித்தான கலவை ஆகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் ஒரே நிலைமையில் ஒரு கலவையில் இருந்தால் அந்நிலை ஒருபடித்தான நிலையாகும். ஒரு கரைசலில் இரண்டு பொருள்கள் கலந்திருந்தால் அது இருமடிக் கரைசல் என்று அழைக்கப்படும்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு உப்புக்கரைசல், உப்பும், நீரும் சேர்ந்த கலவையே உப்புக்கரைசல் ஆகும்.

3. கரைபொருள் மற்றும் கரைப்பான் பற்றி கூறு.
ஒரு கரைசலில் எந்தப் பொருள் குறைந்த அளவு நிறையில் உள்ளதோ அது கரைபொருள். எந்தப் பொருள் அதிக அளவு நிறையில் உள்ளதோ அது கரைப்பான். பொதுவாக கரைப்பான் என்பது கரைக்கும் ஊடகம். இது கரைபொருளின் துகள்களைச் சூழ்ந்து கொள்வதால் கரைசல் உருவாகும். ஒரு கரைசலில் எது கரைகிறதோ அது கரைபொருள், எது கரைக்கின்றதோ அது கரைப்பான்,
கரைபொருள் + கரைப்பான் = கரைசல்

4. உண்மைக் கரைசல், கூழ்மக் கரைசல் வரையறு.

உண்மைக் கரைசல்கள்:
இது ஒரு ஒருபடித்தான கலவை. இதில் கரைபொருளின் துகள்கள் நன்கு கரைப்பானில் கரைந்திருக்கும். எ-கா: சர்க்கரைக் கரைசல்.
கூழ்மக் கரைசல்கள்:
இது பிரிகை நிலைமை மற்றும் பிரிகை ஊடகம் எனும் இரண்டு பகுதிகளால் ஆன கலவை ஆகும். துகள்களாக பிரிக்கப்பட்ட பொருள் பிரிகை நிலைமை எனப்படும். கூழ்மத் துகள்கள் விரவியுள்ள தொடர் நிலைமை பிரிகை ஊடகம் எனப்படும்.
பிரிகை நிலைமை + பிரிகை ஊடகம் = கூழ்மக் கரைசல்

5. தொங்கல்கள் என்றால் என்ன? படத்துடன் விளக்குக.

கரைப்பானில் கரையாமல் இருக்கும் சிறுதுகள்களின் பலபடித்தான கலவையே தொங்கல்கள் எனப்படும். திண்மத் துகள்கள் உருவளவு பெரிதாக காணப்படுவதால் அவை கட்புலனாகுபவை. எ.கா. சுண்ணாம்பு நீரின் கலவை.


சுண்ணாம்பு        +     நீர்          -     சுண்ணாம்பு கலந்த  நீர்         ​​​தொங்கல்

6. டின்டால் விளைவு என்றால் என்ன? விளக்கம் தருக.

கூழ்மத் துகளின் மீது ஒளியானது பட்டு சிதறும் நிலையே டின்டால் விளைவு எனப்படும். ஒளியானது உண்மைக் கரைசலின் வழியே செலுத்தப்படும்போது சில ஒளிக்கற்றைகள் உட்கிரகிக்கப்படுகின்றன. சில கற்றைகள் வெளி அனுப்பப்படுகின்றன. உண்மைக் கரைசலில் உள்ள துகள்கள் ஒளிக்கற்றையைச் சிதறடிக்கும் வண்ணம் பெரிதாக இல்லை. ஆனால் ஒளியானது கூழ்மத்தின் வழியே செலுத்தப்படும்போதுஅளவில் பெரிதாக உள்ள கூழ்மத்துகள்களால் சிதறடிக்கப்பட்டு கண்ணுக்குத் தெரிகிறது. இதுவே டின்டால் விளைவு எனப்படும்.

7. பிரெளனியின் இயக்கம் என்றால் என்ன?

தொடர்ந்து ஒழுங்கில்லா நிலையில் இயங்கும் கூழ்மத்துகளின் இயக்கமே பிரெளனியின் இயக்கம் எனப்படும்.
நீரில் மகரந்தத் துகள்களின் இயக்கத்தை ஆராயும்போது இந்நிகழ்வை இராபர்ட் பிரெளன் என்ற அறிவியல் அறிஞர் கண்டறிந்தார். அதனால் இந்நிகழ்வு பிரெளனியின் இயக்கம் என அழைக்கப்படும்.

8.உண்மைக்கரைசலின் பண்புகளைக் கூறுக? 

வ.எண். பண்புகள் உண்மைக் கரைசல்
1

துகள்களின் உருவளவு ( A0 )

( 1 A0 = 10-10 m )

 1  A0 முதல் 10  A0 வரை.
2 தோற்றம் ஒளிபுகும் தன்மை கொண்டது
3 துகளைப் பார்க்க கூடிய திறன் நுண்ணோக்கியின் மூலமும் தெரிவதில்லை
4 கரைசலின் தன்மை  ஒரு படித்தானவை.
5 துகளின் பரவும் தன்மை எளிதில் பரவும்.
6                சிதறல் விளைவு                                                  ஒளியைச் சிதறச் செய்யாது.                                                        

9.கூழ்மக்கரைசலின் பண்புகளைக் கூறுக?

 

வ.எண். பண்புகள் கூழ்மக் கரைசல்
1

துகள்களின் உருவளவு ( A0 )

( 1 A0 = 10-10 m )

 10 A0 முதல் 2000 A0 வரை.
2 தோற்றம்  பகுதியளவு ஒளிபுகும்.
3 துகளைப் பார்க்க கூடிய திறன்   நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடியும்.
4 கரைசலின் தன்மை  பலபடித்தானவை.
5 துகளின் பரவும் தன்மை  மெதுவாகப் பரவும்.
6                சிதறல் விளைவு                                                   ஒளியைச் சிதறச் செய்யும்.                                                        

10.தொங்கல்களின் பண்புகளைக் கூறுக?

 

வ.எண். பண்புகள் தொங்கல்
1

துகள்களின் உருவளவு ( A0 )

( 1 A0 = 10-10 m )

 2000 A0 மேல்.
2 தோற்றம்  ஒளிபுகா தன்மை கொண்டது.
3 துகளைப் பார்க்க கூடிய திறன்  கண்ணால் பார்க்க இயலும்.
4 கரைசலின் தன்மை  பலபடித்தானவை.
5 துகளின் பரவும் தன்மை  பரவாது அல்லது பரவும் தன்மை அற்றது.
6                சிதறல் விளைவு                                                 ஒளியைச் சிதறச் செய்யாது.                                                      


11. கரைப்பானின் தன்மையைப் பொருத்து கரைசல்களின் வகையைக் கூறு.

கரைப்பானின் இயல்பைப் பொருத்து கரைசல்களை இருவகையாகப் பிரிக்கலாம்.
அ) நீர்க்கரைசல்:
எந்த ஒரு கரைசலில், கரைபொருளைக் கரைக்கும் கரைப்பானாக நீர் செயல்படுகிறதோ, அக்கரைசல் நீர்த்த கரைசல் எனப்படும். எ.க.: சர்க்கரைக்கரைசல்.
ஆ) நீரற்ற கரைசல்:
எந்த ஒரு கரைசலில் நீரைத் தவிர, பிற திரவமானது கரைப்பானாக செயல்படுகிறதோ, அக்கரைசல் நீரற்ற கரைசல் எனப்படும். எ.க.: பென்சீன், ஈதர் மற்றும் CS2 முதலானவை நீரற்ற கரைப்பானுக்கு சிறந்த உதாரணங்கள்.


12. கரைபொருளின் அளவைப் பொருத்து கரைசல்களின் வகைகளைக் கூறுக. ஏதேனும் ஒன்றை விளக்கு.
கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் அளவைப் பொருத்து, கரைசல்கள் மூன்று வகைப்படும். அவை,
1. தெவிட்டாத கரைசல்
2. தெவிட்டிய கரைசல்
3. அதி தெவிட்டிய கரைசல்

அ) தெவிட்டாத கரைசல்:
கரைப்பானோடு ஒப்பிடும் போது குறைந்த அளவு கரைபொருளைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் எனப்படும். இக்கரைசல் தெவிட்டும் நிலை அடையும் வரை கரைபொருளை சேர்க்க முடியும்.

13. தெவிட்டிய கரைசல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
எந்த ஒரு கரைசலில் ஒரு குறிப்பிட்ட அளவு கரைப்பானில், மேலும் கரைபொருள் கரைய முடியாதோ, அக்கரைசல் தெவிட்டிய கரைசல் எனப்படும்.
எ.கா. 1) கார்பன்-டை-ஆக்சைடு நீரில் கரைந்து உருவான தெவிட்டிய கரைசல் எனப்படும்.
2) 36 கிராம் சோடியம் குளோரைடு உப்பு, 100 கிராம் நீரில் கரைக்கப்பட்ட தெவிட்டிய கரைசல்.

14. கரைதிறன் என்றால் என்ன?
கரைபொருளின் கரைதிறன் என்பது எத்தனை கிராம் கரைபொருள், 100 கிராம் கரைப்பானில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் கரைந்து ஒரு தெவிட்டிய நிலையை அடைகிறதோ அதுவே அப்பொருளின் கரைதிறன் என்கிறோம். நீரில் 20 0 C வெப்பநிலையில் காப்பர் சல்பேட்டின் கரைதிறன் 20.7 கிராம்.

வெப்பநிலை, கரைபொருள் அல்லது கரைப்பானின் தன்மை மற்றும் அழுத்தம் போன்றவை கரைதிறனை பாதிக்கும் காரணிகள் ஆகும்.

15. கரைதிறனை பாதிக்கும் காரணிகளில் ஒன்றான வெப்பநிலை பற்றி கூறு,

வெப்பநிலை விளைவு:
அ) வெப்பநிலை அதிகமானால் வெப்பம் கொள் வினையில் கரைதன்மை அதிகமாகும். எ.கா. KNo3 உப்பின் கரைதன்மை வெப்பநிலை அதிகரிப்பால் அதிகமாகிறது. மாறாக
ஆ) வெப்ப உமிழ்வினையில், கரைதன்மை குறைகிறது.

எ.கா. சுட்ட சுண்ணாம்பின் கரைதன்மை வெப்பநிலை அதிகரிப்பால் குறைகின்றது.

16. கரைதிறனை பாதிக்கும் காரணியான கரைப்பான், கரைபொருள் இவற்றின் தன்மை மற்றும் அழுத்தம் பற்றியும் கூறு.

அயனி உப்பானது, முனைவுற்ற கரைப்பானில் எளிதில் கரையும். ஆனால் அது முனைவற்ற கரைப்பானில் மிகச் சிறியதளவே கரையும்.

எ.கா. சாதரண உப்பு தண்ணீரில் எளிதாக கரையும்.
அழுத்தத்தால் விளைவு:
அழுத்தத்தால் கரைதிறனுக்கு ஏற்படும் விளைவை வாயுநிலைக் கரைபொருளில் மட்டும் உணரமுடியும் . வாயுவிரவிய நீர்மக் கரைசலில் அழுத்த அதிகரிப்பால் கரைதன்மை அதிகரிக்கும். எ.கா.CO2 வாயு விரவிய குளிர்பானம்.

17. குறிப்பு வரைக: 1)ஹென்றியின் விதி 2) அதிதெவிட்டிய கரைசல்.

1)ஹென்றியின் விதி :
அழுத்த அதிகரிப்பு, வாயுக்களில் கரை தன்மையை அதிகரிக்கும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட பருமனவு நீர்மத்தில் கரைந்துள்ள வாயுவின் நிறை அதன் மீது செலுத்தப்பட்ட அழுத்தத்திற்கு நேர்விகிதப் பொருத்தமுடையது. இதுவே 'ஹென்றியின் விதி' என்றழைக்கப்படும்.

2) அதிதெவிட்டிய கரைசல்:
குறிப்பிட்ட வெப்பநிலையில் தெவிட்டிய கரைசலை விட அதிகமான கரைபொருளைக் கொண்ட கரைசல் அதி தெவிட்டிய கரைசல் எனப்படும்.

18.தெவிட்டிய கரைசலுக்கும், தெவிட்டாத கரைசலுக்கும் உள்ள வேறுபாடுகளை கீழ்க்காணும் குறிப்புகள் மூலம் எழுது.
அ) 16 கிராம் NaCl 100 கிராம் நீரில்
ஆ) 36 கிராம் NaCl 100 கிராம் நீரில் (குறிப்பு NaCl-ன் கரைதிறன் 36 கிராம்)

------------------------------------------------------------------------------------------------------------------------------
தெவிட்டிய கரைசல் தெவிட்டாத கரைசல்
36 கிராம் NaCl 100 கிராம் நீரில்
------------------------------------------------------------------------------------------------------------------------------
எந்த ஒரு கரைசலில் ஒரு குறிப்பிட்ட அளவு கரைப்பானோடு ஒப்பிடும் போது குறைந்த அளவு
கரைப்பானில் மேலும் கரைபொருள் கரைய முடியாதோ கரைபொருளைக் கொண்ட கரைசல் தெவிட்டாத
அக்கரைசலே தெவிட்டிய கரைசல் எனப்படும். கரைசல் எனப்படும். இக்கரைசலில் கரைபொருளைத்
தெவிட்டும் நிலை அடையும் வரை சேர்க்க முடியும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------


19. 20 கிராமம் உப்பை 50 கிராம் நீரில் கரைந்திருந்தால் அக்கரைசல் செறிவின் சதவீத நிறையைக் கணக்கிடுக.

தீர்வு:
                                                                                    கரைபொருளின் நிறை
கரைசல் செறிவின் நிறை சதவீதம் = ----------------------------------------------------------------------------  X 100
                                                                              கரைபொருளின் நிறை + கரைப்பானின் நிறை


                                                                    20
                                                             = ---------- X 100
                                                                 20+50


                                                                     20
                                                             = ---------- X 100
                                                                   70

                                                             = 28.5 %


20) 10 கிராம் சாதாரண உப்பை 40 கிராம் நீரில் கரைத்திடும் போது உருவான கரைசல் செறிவின் நிறை சதவீதத்தைக் கணக்கிடுக.

தீர்வு:
                                                                                    கரைபொருளின் நிறை
கரைசல் செறிவின் நிறை சதவீதம் = ------------------------------------------------------------------------------ X 100
                                                                              கரைபொருளின் நிறை + கரைப்பானின் நிறை


                                                                    10
                                                              = ---------- X 100
                                                                 10+40


                                                                     10
                                                             = ---------- X 100
                                                                     50

                                                             = 20 %

21) 2 கிராம் பொட்டாசியம் சல்பேட்டை 12.5 மி.லி. நீரில் கரைத்து கிடைத்த கரைசல் 600 C வெப்பநிலையில் உப்புப் படிகங்களைத் தந்ததெனில், பொட்டாசியம் சல்பேட்டின் கரைதிறனை கணக்கிடுக.

தீர்வு:

12.5 மி.லி நீரின் நிறை = 12.5 கிராம்


12.5 மி.லி நீரில் கரைந்துள்ள பொட்டாசியம் சல்பேட்டின் நிறை = 2 கிராம்.

                                                                                                             2
1 கிராம் நீரில் கரைந்துள்ள பொட்டாசியம் சல்பேட்டின் நிறை = ----- கிராம்.
                                                                                                           12.5


                                                                                                                       2
எனவே, 100 கிராம் நீரில் கரைந்த பொட்டாசியம் சல்பேட்டின் நிறை = ----- X 100.
                                                                                                                     12.5

                                                                                                                                    = 16 கிராம்.

ஃ பொட்டாசியம் சல்பேட் உப்பின் கரைதிறன் 600 C வெப்பநிலையில் = 16 கிராம்.



22) 300 C வெப்பநிலையில் சோடியம் குளோரைடு கரைந்த தெவிட்டிய கரைசலில் 50 கிராம் நிறையுள்ள கரைசலை ஆவியாக்கும் போது 13.2 கிராம் நிறையுள்ள நீரற்ற NaCl உருவாகிறது, எனில் NaCl-ன் கரைதிறனை 300 C-ல் கணக்கிடுக.


கரைசலில் உள்ள நீரின் நிறை = 50-13.2

                                                  = 36.8 கிராம்

                                       NaCl-ன் நிறை
NaCl-ன் கரைதிறன் = ----------------------------- X 100.
                                         நீரின் நிறை

                                     13.2
                                = --------- X 100.
                                     36.8

ஃ NaCl-ன் கரைதிறன் = 36 கிராம்.

New layer...
Paid Users Only!
Paid Users Only!
Paid Users Only!
Paid Users Only!
Std 10
Tamil Nadu (Tamil Medium)




Practice in Related Chapters
karaisalgal
Vedhi Vinaikal
Anukalum Mulagurkalum
thanimangalin aavarthana vahaipaadu
Powered By