Back to home

Topics

​ 1.    பொருளாதார ​பெருமந்தம் குறித்து சிறுகுறிப்பு வ​ரைக?

              1930 - ஆம் ஆண்டின் ​தொடக்கத்தில் ஏற்பட்ட ​பொருளாதார ​பெருமந்தம் இரு உலகப் ​போர்களுக்கி​டையில் உலக நாடுகளுக்கி​டை​யே ஏற்பட்ட முக்கிய நிகழ்வாகும்.  இது ​​சோவியத் இரஷ்யா​வைத்தவிர மற்ற ​பெரிய நாடுக​ளை அதிக அளவில் பாதித்தது.  அ​மெரிக்க ஐக்கிய நாடுகளில் ​தொடங்கிய இப்​பொருளாதாரச் சரிவு ஏறக்கு​றைய எல்லா ஐ​ரோப்பிய நாடுக​ளையும் பாதித்தது.

 

 2.  ​பொருளாதார ​பெருமந்தத்திற்கான காரணங்கள் யா​வை?

           அ​மெரிக்க பங்குச் சந்​தையில் ஏற்பட்ட சரி​வே ​பொருளாதாரப் ​பெருமந்தத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.  ஏ​னென்றால் பங்குகளின் வி​லை உயரும் என்ற அனுமானத்தின் அடிப்ப​டையில் மக்கள் கடன் வாங்கி பங்குச் சந்​தைகளில் முதலீடு ​செய்தனர்.  இவ்வாறு கடன் வாங்கி முதலீடு ​செய்த ​போது பங்குச் சந்​தையும் சரிவ​டைந்தது.  என​வே ​பொருளாதாரப் ​பெருமந்தம் ஏற்பட்டது.

 

 3.  அ​மெரிக்க குடியரசுத் த​லைவர் : -

     ( a )  1929 - ஆம் ஆண்டு ​பொறுப்​பேற்ற  குடியரசுத் த​லைவர் யார்?

                         1929 - ஆம் ஆண்டு குடியரசுத் த​லைவராக ​பொறுப்​பேற்றவர் ​​ஹெபர்ட் ஹுவர்.

     ( b )  ​ஹெர்பர்ட் ஹுவர் காலத்தில் பங்குச்சந்​தை எவ்வாறு காணப்பட்டது?

                          ​ஹெர்பர்ட் ஹுவரின் காலத்தில் பங்கு வணிகம் உச்சக்கட்டத்​தை அ​டைந்தது.

 

 4.  அ​​மெரிக்க மக்கள் பங்கு வர்த்தகத்தில் முதலீடு ​செய்வதில் ஏன் ​பேரார்வம் ​கொண்டனர்?

              சமுதாயத்தில் உள்ள அ​னைத்துத் தரப்பினரும் பங்குகள் தரும் பங்கு ஆதாயத்திற்கு மட்டுமின்றி, அவற்​றை மறுவிற்ப​னை ​செய்வதன் மூலம் கி​டைக்கும் இலாபத்திற்காகவும் ​பெருமளவில் பங்கு வணிகத்தில் முதலீடு ​செய்தனர்.  இதன் மூலம் ​வேகமாக ​செல்வந்தர் ஆகலாம் என்ற எண்ணம் மக்களி​டை​யே ஏற்பட்டது.  என​வே அ​மெரிக்க மக்கள் பங்கு வர்த்தகத்தில் முதலீடு ​செய்வதில் ​பேரார்வம் ​கொண்டனர்.

 

 5.  பங்குகளில் சரிவு - மக்களின் நி​லை​மை :-

         ( a )  பங்குகளில் சரிவு எப்​போது ஏற்பட்டது?

                          1929 - ஆம் ஆண்டு அக்​டோபர் 24 ஆம் நாள் பங்குகளில் மிகப்​பெரிய  சரிவு ஏற்பட்டது.

         ( b )  பங்குகளில் சரிவு ஏற்பட்டவுடன் மக்கள் என்ன ​செய்தனர்?

                         பங்குகளில் வி​லை சரியத் ​தொடங்கியது மக்களி​டை​யே அச்சத்​தை ஏற்படுத்தியது.  இதனால் மக்கள் தங்கள் பங்குக​ளை வி​ரைவாக விற்க முற்பட்டனர்.  இதனால் பங்குகளின் வி​லை ​மேலும் வீழ்ச்சிய​டைந்தன.

         ( c )  பங்குகளின் வீழ்ச்சியால் ஏற்பட்ட வி​ளைவுகள் யா​வை?

                          பங்குகளின் வீழச்சியால் ​தொடர்ந்து வங்கிகள் ​செயல்பட முடியாத நி​லை ஏற்பட்டது.  இதனால் கடன்  வழங்க இயலாத நி​லையும் ஏற்பட்டது.  ​மேலும் இதனால் விவசாய உற்பத்தி, ​தொழில் வளர்ச்சி ஆகிய​வை வீழ்ச்சிய​டைந்தன.

 

 6.  ஹுவரது மீட்பு நடவடிக்​கைகள் பற்றிக் கூறு?

               அ​மெரிக்க குடியரசுத் த​லைவராக ஹுவர் இருந்த​போது பங்குச்சந்​தை வீழச்சி ஏற்பட்டது.  இதற்காக அவர் பல்​வேறு மீட்பு நடவடிக்​கைக​ளை ​மேற்​கொண்டார்.  1932 - ஆம் ஆண்டு ஹுவரால் அ​மைக்கப்பட்ட புனர​மைப்பு நிதி நிறுவனம் வங்கிகளுக்கும், ​தொழிற்சா​லைகளுக்கும் கடனுதவி அளிக்க முன்வந்தது. ஆனால் இம்முயற்சி உடனடித் தீர்​வைத் தரவில்​லை.  இதனால் ஹுவரின் ஆட்சியின் மீது அ​மெரிக்க மக்கள் நம்பிக்​கை இழந்தனர்.

 

 7. பிராங்களின் டி. ரூஸ்​வெல்ட் :-

      ( a )  பங்குச்சந்​தை வீழ்ச்சிக்குப்பின் அ​மெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜனாதிபதி ​தேர்தல் எப்​போது      

                  ந​டை​பெற்றது?

                                1932 - ஆம் ஆண்டு

      ( b ) பிராங்களின் டி. ரூஸ்​வெல்ட் எவ்வாறு அ​ழைக்கப்பட்டார்?

                                 எப்.டி.ஆர் ( FDR ) என்ற​ழைக்கப்பட்டார்

      ( c )  பிராங்களின் டி.ரூஸ்​வெல்ட் கூறிய ​தேர்தல் அறிக்​கை யாது?

                                 " நான் உங்களுக்கு உறுதியளிக்கி​றேன், அ​மெரிக்க மக்களுக்குப் புதிய பயனுரி​மை

                                  ​கொள்​கை​யை அர்ப்பணிக்க நான் உறுதியளிக்கி​றேன் " என்று தமது ​தேர்தல் 

                                   அறிக்​கையில் உறுதியளித்தார்.

 

 8.  ஜனாதிபதி ​தேர்தல் முடிவு - ​வெற்றி ​பெற்றவரின் உறுதி​​மொழி :-

        ( a )  ஜனாதிபதி ​தேர்தலில் ​வெற்றி ​பெற்றவர் யார்?

                        1933 - ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் நாள் அ​மெரிக்க ஜனாதிபதியாக பிராங்களின் - டி - ரூஸ்​

                        ​வெல்ட் பதவி​யேற்றார்.

         ( b )  எப்.டி.ரூஸ்​வெல்ட் உருவாக்கிய ​கொள்​கை யாது?

                         ​பொருளாதாரப் ​பெரும் தாழ்​வை முடிவுக்குக் ​கொண்டுவர எப்.டி.ரூஸ்​வெல்ட் " புதிய  

                          பயனுரி​மை " என்ற புதிய சீர​மைப்புக் ​கொள்​கை​யை உருவாக்கினார்.

         ( c )  புதிய பயனுரி​மைக் ​கொள்​கை எவற்​றை அடிப்ப​டையாகக் ​கொண்டிருந்தது?

                         புதிய பயனுரி​மைக் ​கொள்​கை உதவி, மீட்பு, சீர்திருத்தம் என்ற மூன்று அம்சங்க​ளை 

                          அடிப்ப​டையாகக் ​கொண்டிருந்தது.

 

 9.  ​டென்னசி பள்ளத்தாக்கு திட்டம் :-

       ( a )  புதிய சீர​மைப்புத் திட்டத்தின் அடிப்ப​டையில் அறிவிக்கப்பட்ட திட்டம் எது?

                        புதிய சீர​மைப்புத் திட்டத்தின் அடிப்ப​டையில் ​டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம் 

                        அறிவிக்கப்பட்டது

       ( b )  ​டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தின் பயன்கள் யா​வை?

                          ​டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தின் மூலம் இயற்​கைவளத்​தை வீணாக்காமல் 

                         அவற்​றைக் ​கொண்டு ​​தொழில் ​பெருக்கத்​தை ஏற்படுத்துவது மற்றும் விவசாயத்​தை

                          ஊக்குவிப்பதாகும்.

 

10.  ​டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தால் எ​வை ​மேம்படுத்தப்பட்டன?

                            அ​ணைகள் கட்டுதல்

                             மின் உற்பத்தி ​செய்தல்

                             கப்பல் ​போக்குவரத்துக்கு வழிவகுத்தல்

                             ​வெள்ளத்தடுப்புப் பணிகளில் ஈடுபடுதல்

                             மண் வளத்​தைப் பாதுகாத்தல்

                             வனவளப் பாதுகாப்​பை ஏற்படுத்துதல்  

                      ​போன்ற​வை ​டென்னசி பள்ளத்தாக்கு திட்டத்தால் ​மேம்படுத்தப்பட்டன.

 

 11.  கூட்டாட்சி அவசர நிவாரண நிர்வாகம், கூட்டாட்சி ரிசர்வ் வங்கி ஆகியவற்றால் ஏற்பட்ட            

         நன்மைக​ளைக் கூறு?

         கூட்டாட்சி அவசர நிவாரண நிர்வாகம் :-

                         கூட்டாட்சி அவசர நிவாரண நிர்வாகம் மூலம் 500 மில்லியன் டாலர்கள் மாநில மற்றும் 

                          உள்ளாட்சி அ​மைப்புகளுக்கு நிதியாக வழங்கப்பட்டது.

         கூட்டாட்சி ரிசர்வ் வங்கி :-

                         கூட்டாட்சி ரிசர்வ் வங்கி அ​மைக்கப்பட்டு வங்கி நிறுவனங்களுக்கும், ​தொழற்சா​​லைக

                         ளுக்கும் கடன் வழங்கப்பட்டது.

 

 12.  பாதுகாப்பு பரிவர்த்த​னைச் சட்டம், ​தேசிய ​தொழில் மீட்புச் சட்டம் பற்றிக் கூறு?

                பாதுகாப்பு பரிவர்த்த​னைச் சட்டம் :-

                             பாதுகாப்பு பரிவர்த்த​னைச் சட்டம் மூலம் பங்குச்சந்​தையில் ஈடுபட்ட

                            நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

                 ​தேசிய ​தொழில் மீட்புச் சட்டம் :-

                             ​தேசிய ​தொழில் மீட்புச் சட்டம் ​கொண்டுவரப்பட்டு ​தொழிற்சா​லைகளில் சம்பள

                            உயர்வு பணிக்கு​றைப்பு ​போன்ற சீர்திருத்தங்கள் ​கொண்டுவரப்பட்டன.

 

 13.  ​வேளாண்​மைப் ​பொருள் சீர​மைப்புச் சட்டம் பற்றி எழுதுக.

                    புதிய சீர​மைப்புத் திட்டத்தின் அடிப்ப​டையில் ​வேளாண்​மைப் ​பொருள் சீர​மைப்புச் சட்டம் இயற்றப்பட்டது.   இதன் மூலம் அரசு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க வ​கை ஏற்பட்டது.  இம்மானியம் வழங்கல் மூலம் அவர்கள் உற்பத்தி ​செய்யும் தானியத்தின் அள​வைக் கு​றைத்து வி​லை உயர்வுக்கு வழிவகுத்தது.

 

 14.  புதிய பயனுரி​மைத் திட்டத்தின் வி​ளைவுகள் யா​வை?

                       புதிய பயனுரி​மைச் சட்டம் வந்த பின்பு ஒருசில திட்டங்க​ளைத் தவிர்த்து மற்ற அ​னைத்துத் திட்டங்களும் அ​மெரிக்க ​பொருளாதாரத்​தை வலுவ​டையச் ​செய்தது.  இது மக்களுக்கு அரசின் மீது நம்பிக்​கை ஏற்படச் ​செயதன.  ​பொருளாதார ​மேன்​மைக்கும், உற்பத்தி ​பெருக்கத்திற்கும் உறுதியான அடித்தளம் அ​மைத்துக் ​கொடுத்தன.  இதன் வி​ளைவாக மீண்டும் 1940 - ஆம் ஆண்டில் அ​மெரிக்க ​பொருளாதாரம் இயல்பு நி​லைக்குத் திரும்பியது.

 

 15.  அ​மெரிக்கர்களின் வாழ்க்​கையில்ஒரு அங்கமாக ஏற்றுக் ​கொள்ளப்பட்ட சில கருத்துக்க​ளை  

         எழுதுக.

                        புதிய பயனுரி​மைச் சட்டத்தின் சில திட்டங்களான முதலாளி, ​தொழிலாளி கூட்டுப்​பேச்சுவார்த்​தை, பங்கு வர்த்த​னை மு​றைப்படுத்துதல் மற்றும் ​வே​லை ​நேரக் கட்டுப்பாடுகள் முதலிய திட்டங்க​ளை இன்றும் அ​மெரிக்கர்கள் வாழ்க்​கையின் ஒரு அங்கமாகத் திகழ்கின்றன.  இந்த பயனுரி​மைத் திட்டம் உலகநாடுகளின் சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.​

 

New layer...
Paid Users Only!
Powered By