Back to home

Topics

1) மரபுப் பொறியியல் பற்றி கூறு :
               மரபுப் பொறியியல் என்பது உயிரியின் குரோமோசோமின் டி,என்ஏ வில் புதிதாக மரபியல் தன்மைகளைச் சேர்த்தோ, குறைத்தோ மாற்றம் செய்வதாகும். இதன் மூலம் உயிரியின் புற அமைப்பில் மாற்றத்தை தோற்றுவிக்க இயலும். இச்செயல்முறை டி.என்.ஏ மாற்றுத்தொழில்நுட்பம் எனப்படும். இது தற்காலத்தில் மரபியல், மூலக்கூறுவியல் மற்றும் உயிர்வேதியியலில் ஏற்பட்ட வளர்ச்சியால் ஏற்பட்டதாகும்.

2) மரபுப் பொறியியலின் நன்மைகளை வரிசைப்படுத்து.
    *     ஜீனின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல்.
    *     அதிக அளவில் இன்சுலின் உருவாக்கம், இன்டர்பெரான்,மனிதவளர்ச்சி                                                ஹார்மோன்,கால்நடைகளில் வாய்,குளம்பு நோய் போன்றவற்றிற்கு எதிரான தடுப்பூசி          உற்பத்தி செய்தல்.
    *      விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நிஃப் ஜீனைப் பாக்டீரியாவிற்கு மாற்றி நைட்ரஜனை நிலைநிறுத்தச் செய்தல்.
இவைகளே மரபுப்பொறியியலின் நன்மைகள் ஆகும்.

3) மரபுப் பொறியியலின் அடிப்படைத் தொழில்நுட்பம் பற்றி எழுதுக.
             மரபுப்பொறியியல் என்பது உயிரியின் குரோமோசோமின் டி.என.ஏ வில் புதிதாக மரபியல் தன்மைகளைச் சேர்த்தோ, குறைத்தோ மாற்றம் செய்வதாகும்.
             மரபுப்பொறியியலின் அடிப்படைத் தொழில்நுட்பத்தில் டி.என்.ஏ வைப் பல துண்டுகளாக வெட்டியும் மற்றும் இத்துண்டுகளை ஒட்ட வைக்கும் முறையாகும். டி.என.ஏ வை சிறு துண்டுகளாக வெட்டவும், இத்துண்டுகளை ஒட்ட வைக்கும் நொதிகளையும் கண்டறிந்த பின்னரே, மரபுப் பொறியியல் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது.

 

4) மரபுப் பொறியியலில் நொதிகளின் பங்கு என்ன?
                 வரையறை நொதிகள் அல்லது ரெஸ்டிரிக்ஷன் எண்டோ நியூக்ளியேஸ் என்னும் நொதி, ஒரு மூலக்கூறு கத்திரிகோலாகச் செயல்பட்டு டி.என்.ஏ வைக் குறிப்பிட்டப் பகுதியில் வெட்டுவதற்கும்,

                  டி.என்.ஏ லிகேஸ் நொதி (மூலக்கூறு பசை ) டி.என்.ஏ வின் வெட்டப்பட்ட துண்டுகளை ஒட்ட வைப்பதற்கும் பயன்படுகிறது.

                  டி.என்.ஏ வை சிறு துண்டுகளாக வெட்டவும், இத்துண்டுகளை ஒட்டவைக்கவும் நொதிகளையும் கண்டறிந்த பின்னரே, மரபுப் பொறியியல் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது.

5) உயிரித் தொழில்நுட்பவியலின் பயன்பாடு குறித்து எழுது.
                  உயிரினச் செயல்பாடுகளிலும், உயிர்த்தொழில்நுட்பம்,மருத்துவம், விவசாயம், கால்நடை உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துதலிலும் பயன்படும் புதிய தொழில்நுட்பம் ஆகும்.
                   இச்செயல்பாடு சாராயத்தொழிற்சாலை, நொதித்தொழில்நுட்பம், நோய் எதிர்ப்புப் பொருள் உற்பத்தி, கரிம அமில உற்பத்தி, வைட்டமின், தடுப்பூசி, ஸ்டிராய்டு மற்றும் மோனோகுளோனல் எதிர்ப்புப் பொருள்களின் உற்பத்திக்குப் பெரிதும் பயன் படுகிறது.

 

 6) உயிர்தொழில்நுட்பவியலில் சாராயத்தொழிற்சாலை, நொதித்தொழில்நுட்பவியல் குறித்து எழுது.
சாராயத்தொழிற்சாலை:
                நொதித்தல் மூலம் பீர், ஒயின் போன்ற ஆல்கஹால் பொருள்கள் உற்பத்திக்கு பயன்படுகின்றன.
நொதித் தொழில்நுட்பவியல்:
                 நொதி என்பது உயிரியல் வினை ஊக்கிகள் ஆகும். செல்களின் செயலை வேகப்படுத்துதல் இதன் பணியாகும். கரிம வேதியியலிலும் மருந்து உற்பத்தித் தொழிலில் நொதிகள் அதிகமாகப் பயன்படுகின்றன.

7) உயிரித் தொழில்நுட்பவியலில் உயிர் எதிர்ப்புப் பொருள்கள் மற்றும் வைட்டமின்கள் குறித்து எழுது.
உயிர் எதிர்ப்புப்பொருள்கள்:
                   மனித உடலின் நோய் எதிர்ப்புத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில், உடலின் நச்சு நுண்ணியிரிகளுக்கு எதிராக மருந்துப் பொருள் உற்பத்தியியலில் பயன்படுகின்றன.
வைட்டமின்கள்:
                  வைட்டமின்கள் இயற்கையாக உணவில் காணப்படுகின்றன. இவை மிகச்சிறிய அளவில் தேவைப்படும் வேதிப்பொருளாகும். ஆற்றல் ஏதும் அளிக்காத, ஆனால் ஆற்றல் மாற்றம் மற்றும் வளர்சிதை மாற்ற ஒழுங்குபடுத்துதலில் பெரிதும் பயன்படுகிறது.

 

 8) உயிர்த் தொழிலில்நுட்பவியலில் தடுப்பூசிகள் மற்றும் ஸ்டிராய்டுகள் பற்றி கூறு.
தடுப்பூசிகள்:
                குறிப்பிட்ட நோய்க்கு எதிராகச் செயல்படும் பொருள்களாகும். இவை ஓர் எதிர்ப்புத் தோன்றியாக (ஆண்டிஜென்) செயல்பட்டு, எதிர்ப்புப் பொருள் (ஆண்டிபாடி) உற்பத்தி செய்யப்பயன்படுகின்றன.
ஸ்டிராய்டுகள்:
                ஸ்டிராய்டுகள் லிப்பிடுளிலிருந்துப் பெறப்பட்டவையாகும். எ.கா ரைசோபஸ் பூஞ்சைகளிலிருந்து கொலஸ்டிரால் அடங்கிய பிரட்னிசெலோன் என்னும் ஸ்டிராய்டு பெறப்படுகிறது.

9) முதன் முதலில் பிரதியாக்க முறையில் செம்மறி ஆட்டினை உருவாக்கியவர் யார்? விளக்கம் தருக.
                 முதன் முதலில் பிரதியாக்க முறையில் செம்மறி ஆட்டினை உருவாக்கியவர் டாக்டர் ஐயான் வில்முட்.
                 டாலி என்பது பிரதியாக்க முறையில் டாக்டர் ஐயான் வில்முட் மற்றும் அவருடைய உதவியாளர்களால் ஸ்காட்லாண்ட் ரோஸ்லிண்ட் ஆய்வு நிறுவனத்தில் ஜீலை 1996 ஆம் அண்டு உருவாக்கப்பட்ட ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியாகும்.
                 டாலியை உருவாக்க ஆய்வாளர்கள் ஆறு வயதுடைய பிண்டார்செட் வெள்ளைச்செம்மறியாட்டின் பால்மடிச் செல்லின் உட்கருவைப்பயன் படுத்தினர்.

 

 10) டாலியை உருவாக்க ஐயான் வில்முட் செம்மறி ஆட்டின் பால்மடிச்செல்லின் உட்கருவை எவ்வாறு பயன்படுத்தினார்?
                      பால்மடியிலிருந்து எடுக்கப்பட்ட செல்லின் உட்கரு அண்டத்தின் சைட்டோபிளாசத்தில் சேர்க்கப்பட்டது.
                     உட்கரு சேர்க்கப்பட்ட அண்டத்தை மற்றொரு வளர்ப்புத்தாயான செம்மறியாட்டின் கருப்பையில் பதியப்பட்டது. அண்டத்தினுள் இணைக்கப்பட்ட உட்கருவில் குரோமோசோம்கள் இருமய நிலையில் இருந்ததால் இவை வளர ஊக்குவிக்கப்பட்டு , புதிய குளோனாக உருவாகிப்பிறந்தது. இதை டாக்டர் வில்முட் டாலி எனப்பெயரிட்டார்.


11) மூலச்செல்ளின் பண்புகள் யாவை?
மூலச்செல்களுக்கு இரு முக்கியப் பண்புகள் உள்ளன.
             (i) மூலச்செல் என்பது சிறப்படையாத செல் குழுமம் ஆகும். இவை மைட்டாசிஸ் முறையில் பிளவுற்று, மிக அதிக செல்களை உருவாக்கும் தன்மையுடையன.
            (ii) மூலச்செல்கள் குறிப்பிட்ட ஒரு செயல் தன்மை உடையது.
எடுத்துக்காட்டாக இதயத்தசை, இன்சுலினை உற்பத்தி செய்யும் கணையத்தில் காணப்படும் பீட்டா செல்கள், மூளையில் காணப்படும் சிறப்பு நரம்பு செல்கள் போன்றவற்றில் செலுத்தப்பட்டு வளர ஊக்குவிக்கப்பட்டால் இவை சிறப்புதன்மையுடைய செல்களாக மாறும்.

 12) கருவின் மூலச்செல்வகை எவ்வாறு பெறப்படுகிறது?
                   ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் , உடலுக்கு வெளியே செயற்கை முறையில் கரு உருவாக்கப்பட்டு, அக்கருவிலிருந்து கருவின் மூலச்செல்கள் பெறப்படுகின்றன.
                   கருவுருதலுக்குப்பின் , செல் பிரிதலின் மூலம் கருச்செல்கள் கருக்கோளமாகின்றன. வேறுபாடு அடையாத செல் குழுக்கள் தனித்து பிரித்து எடுக்கப்படுகின்றன, இவையே மூலச்செல்கள் எனப்படுகின்றன.

13) முதிர்ந்த அல்லது உடல்மூலச்செல்கள் பற்றி கூறு
                  மனிதன் மற்றும் உயர்நிலை விலங்குகளின் வளர்ச்சிநிலையில் தாய் எபிதீலியல் திசு, இணைப்புத்திசு, தசைத்திசு, இரத்தக்குழல், நரம்பு மற்றும் இனப்பெருக்கத்திசுக்கள் போன்ற நன்கு வேறுபடுத்தப்பட்ட திசுக்களில் காணப்படும். வேறுபாடு அடையாத செல்களுக்கு உடல் மூலச்செல்கள் என்று பெயர்.
                 இவற்றைப் பதித்து வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டால், இவைகள் பிரிந்து பெருகி வளர்ந்து, அதே போன்று திசு வளர்ச்சிக்குரிய செல்களாக மாறும்.

 

 14) அன்றாட வாழ்வில் நுண்ணியிர்ப் பெருக்கத்தின் பயன்பாடுகள் குறித்து எழுது.
தடுப்பூசிகள்:
               கொல்லப்பட்ட, அல்லது உயிருள்ள நுண்ணியிரிகள் மூலம் எதிர்ப்பொருள்கள் பெறப்படுகின்றன. இவை நோய்த்தடுப்பாற்றலை ஊக்குவிக்கப்பயன்படுகின்றன.
உயிர் எதிர்ப் பொருள்கள்:
              இவை பூஞ்சை, பாக்டீரியா மூலம் பெறப்படும் வேதியியல் பொருள்களாகும். நோய் தரும் உயிரிகளைக் கொன்று நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.


15) நுண்ணுயிர் பெருக்கத்தின் பயன்பாடுகளில் வைட்டமின் B12மற்றும் நொதிகள் பற்றி கூறு
வைட்டமின் B12:
                உயிரித் தொழில்நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் B12, பெர்னீஷியஸ் இரத்தசோகை நோயை குணமாக்கப் பயன்படுகிறது.
நொதிகள்:
                 உயிர்வேதியியலில் முக்கிய பங்கேற்கும் நொதிகள், நுண்ணுயிர்ப் பெருக்கம் மூலம் பெறப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக அமைலேஸ் நொதி, பாக்டீரியாவின், அமைலோ புரோட்டீன்கள் மூலம் பெறப்படுகின்றன.

 

 16) உயிர் உணரி மற்றும் உயிர்ச் சிப்புகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
உயிர் உணரி:
                   உயிர் உணரி என்பது நொதி, எதிர்ப்பொருள், ஹார்மோன், நியூக்ளிக் அமிலம் மற்றும் உயிரிகளின் செல்கள் மூலம் போர்த்தப்பட்ட உணரியுடன் இணைக்கப்பட்ட ஒரு கருவியாகும். இக்கருவி உயிரியியல் தூண்டலை மின் தூண்டலாக மாற்றுகிறது.
உயிர்ச் சிப்புகள்:
                  உயிரித் தொழில்நுட்பவியல் மூலமாக, உயிர்ச்சிப்புகள் உருவாக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் உயிரியல் கணிப்பொறிகளை உருவாக்கப் பயன்படுத்தலாம். இவை பாதுகாப்புத்துறை, மருத்துவத்துறையில் பெரிதும் பயன்படலாம்.

17) உயிர் உணரியின் பயன்கள் யாவை?
                 இக்கருவி உயிரியல் தூண்டலை மின் தூண்டலாக மாற்றுகிறது. இக்கருவிகள் மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவியின் மூலம்
(i)  இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடலாம்
(ii)  நோயுறுதல் காரணமாக உருவான உடலின் நச்சுத்தன்மையை கணக்கிடலாம்.
(iii) குடிநீர் மாசுறுதலைக் கணக்கிடலாம்
(iv) உணவின் மணம், சுவை, நயம் போன்றவற்றை அளவிடவும் பயன்படுத்தலாம்.

18)மரபணு மருத்துவம் பற்றி கூறு
                மரபணு மருத்துவம் என்பது மரபு வழியாகவோ மற்றும் பெறப்பட்ட நோய் குறைபாடுகளான புற்று நோய் மற்றும் எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான ஜீனைப் புதிய ஜீன் புகுத்துதல் அல்லது குறைபாடுடைய ஜீனை சரிசெய்யும் முறை மூலம் குணப்படுத்தலாம்.
                மரபணு மருத்துவத்தில் உடற்செல்களில் அல்லது இனச்செல்களில் காணப்படும் ஜீன் குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்யலாம்.

19) மரபணு மருத்துவத்தின் வகைகள் யாவை?
(i) உடற் செல் மரபணு மருத்துவம்
(ii) இனச்செல் மரபணு மருத்துவம்
(i) உடற் செல் மரபணு மருத்துவம்:
                  குறைபாடு உள்ளவர்களின் முழு ஜீன் தொகுதியையும் மாற்றும் முறையாகும். இம்மாற்றம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை.

(ii) இனச்செல் மரபணு மருத்துவம்:
                 பெற்றோர்களின் அண்டம் அல்லது விந்துச் செல்கள் மாற்றத்தினால் செய்யப்படுவதாகும். இது அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது.

20) பிரதியாக்க முறை என்றால் என்ன ? இதன் வகைகள் யாவை ?
பிரதியாக்க முறை :
                   பிரதியாக்க முறை என்பது மரபொத்த உயிரிகளை பிரதிகளாக உற்பத்தி செய்யும் செய்முறையாகும்.
வகைகள்:
(i) இயற்கையானது
(ii) தூண்டப்பட்டது
(i) இயற்கையானது"
                   தோற்றத்தில் ஒரே மாதிரியான இரட்டையர்கள் இயற்கையாகத் தோன்றுவது
(ii) தூண்டப்பட்டது:
செயற்கை முறையில் உட்கரு மாற்றத்தின் மூலம் பெறப்படுவதாகும்.

 

Paid Users Only!
Paid Users Only!
Paid Users Only!
Paid Users Only!
Powered By