Topics |
---|
1.சிலப்பதிகாரம் பெயர்க்காரணம் கூறுக?
சிலம்பு+அதிகாரம்-சிலப்பதிகாரம் சிலம்பினால் அதிகரித்த வரலாற்றை க் கூறும் நூல் என்பது இதன் பொருள் .சிலம்பின் செயலை மையமாகக் கொண்ட கதையைக் கூறுவதால் இந்நூல் இப்பெயர்பெற்றது.இந்நூல் இயல், இசை,நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள்,முத்தமிழ்க் காப்பியம் நாடகக் காப்பியம்,உரையிடப்பட்ட பாட்டுடைச்செய்யுள் எனவும் வழங்கப்பெறும்.
2.சிலப்பதிகாரத்தின் நூல் வகைகளை கூறுக?
இது தமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். மற்றவை மணிமேகலை,சிந்தாமணி,வளையாபதி குண்டலகேசி,என்பன.தமிழிலேயே முதன்முதலாய் எழுதப்பட்ட காப்பியம் இது.ஆதலால்,முதல் நூல்,வழிநூல் என்னும் நூல்வகையுள் இது முதல் நூலாகும்.
3.சிலப்பதிகாரம் உணர்த்தும் உண்மைகள் யாவை?
இந்நூல்,அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்,உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்னும் மூன்று அரிய உண்மைகளை உணர்த்துகிறது.மற்றும் சேர,சோழ,பாண்டியர்கள் என்ற அரசர்களின் பெருமை,புகார்,மதுரை,வஞ்சி என்ற மூன்று நரங்களின் சிறப்பு ,இயற்கைத் தெய்வங்களின் இயல்பு,செங்கோலின் சிறப்பு கற்பு மேம்பாடு, ஊழ்வினைப்பயன் என்ற மூன்று உண்மைகள் என மூன்று மூன்றாகவே எடுத்துக் கூறும் சிறப்புடையது இந்நூல்.
4.சிலப்பதிகாரத்தின் பெருமைகளை கூறுக.
இந்நூல் தமிழ்நாட்டு மூவேந்தர்களையும்,அவருடைய நாடுளின் பெருமைகளையும் சிறப்புகளையும்.பண்டைக்காலத் தமிழ் மக்களின் கலைச்சிறப்பு,அரசியல் முறை,பழக்க வழக்கங்கள்,நாகரிகம் முதலியவற்றையும் நாம் உணர்ந்துகொள்ளக் கருவியாய் விளங்குகிறது.இது சொல் நயம்,பொருள் நயம்,வாய்ந்து கற்பாரின் நெஞ்சைக் கவரும் ஒப்பற்ற காவியமாய்த் திகழ்வதால்"நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்"என்று பாரதியார் இதனைப் பாராட்டியுள்ளார்."தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதிகாரம்"என்று கவிமணி இதனைப் போற்றியுள்ளார்.
5.சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகளைக் கூறுக.
இந்நூல் புகார்க்காண்டம்,மதுரைக்காண்டம்,வஞ்சிக் காண்டம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளாய் அமைந்துள்ளது.புகார்க்காண்டத்தில் பத்துக் காதைகளும்,வஞ்சிக்காண்டத்தில் ஏழு காதைகளும்,மதுரைக்காண்டத்தில் பதின்மூன்று காதைகளுமாய் மொத்தம் முப்பது காதைகள் இந்நூலில் அமைந்துள்ளன.
6.சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர் பற்றி குறிப்பு வரைக.
இந்நூலுக்கு அரும்பதவுரை ஒன்று உள்ளது.அதனை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை அடியார்ககு நல்லார் என்பவர் அவ்வுரையை அடிப்படையாய்க்கொண்டு ஓரழகிய விரிவுரை எழுதியுள்ளார்.அவ்வுரையும் முதல் இரு காண்டங்களுக்கே கிடைத்துள்ளது. இக்காலத்தில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் என்பவர் அவ்விரு உரைகளையும் அடிப்படையாக்கொண்டு மூன்று காண்டங்களுக்கும் விளக்கமான உரை எழுதியுள்ளார்.
7.இளங்கோவடிகளின் பெருமையைக் கூறுக?
இளங்கோவடிகயள் சேர மன்னர் பரம்பரையினராயினும் சோழ,பாண்டிய மன்னர்களை உaயர்த்திக் கூறியுள்ளமையால் பரந்த நோக்கமுடையவர் என்பது விளங்கும்.இவர் சமண மதத்தினரேனும் மற்றைய மதங்களை இழித்துரையாமையாலும்,எல்லாச் சமயக்கடவுளரையும் ஒரே தன்மையாய்ப் புகழந்து பாராட்டுவதாலும் சமரச நோக்கமுடையவர் என்பது தெளிவுறும்.இளமையில் தம் தமையனுக்காக அரசு துறந்து, துறவு பூண்டதால் உடன் பிறந்தானிடம் இவருக்கிருந்த பேரன்பு விளங்கும்.
8.இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றியதற்கான காரணத்தைக் கூறுக.
சேரன் செங்குட்டுவன் பேரியாற்றங்கரையில் தங்கி இயற்கை நலம் கண்டு மகிழ்ந்திருந்த போது,குன்றக்குறவர்கள்அவனை வணங்கி ,அணங்கு போல் வாள் ஒருத்தி துயரமே வடிவமாய் அம்மலையில் வேங்கை மரநிழலில் நின்றதையும் ஒருவன் தேவர் புடை சூழ விமானத்தில் வந்து அவளை விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றதையும் தாம் கண்களால் கண்டதாய்க் கூறினார்.அப்போது செங்குட்டுவனுடன் இருந்த சீத்தலைச்சாத்தனார் அவள் யார் என்பது தமக்குத் தெரியும் என்று கூறி,மதுரையில் வாழந்நபோது தாம் நேரில் கண்ட கோவலன் கண்ணகி வரலாற்றறைக் கூறினார்.அங்கிருந்த இளங்கோவடிகள் அவ்வரலாற்றை கேட்டுக் கண்ணகி வரலாற்றை சிறந்த காவியமாய்ப்பாடினார்.
9.இளங்கோவடிகள் துறவுபூண்டதற்கு காரணம் யாது?
இளையவரான இளங்கோ தந்தைக்குப்பின் நாடாள்வார் என் கூறினார் கணியன்.அதனை பொய்யாக்கும்பொருட்டே அவர் இளமையிலேயே துறவு பூண்டார்.இவ்வாறு துறவு பூண்டமையால் இளங்கோவடிகள் என்றழைக்கப்பட்டார்.
10.சிபி மன்னன் புறாவின் துன்பத்தைப் போக்கியது எவ்வாறு?
சிபி மன்னன் தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவின் எடைக்கு ஈடாய்த்தன் தசையை அரிந்து வைத்தான்.அது புறாவின் எடைக்கு ஈடாகாமையால் தானே துலைத்தட்டில் ஏறி நின்று புறாவின் துன்பத்தினைப் போக்கினான்.
11."தேரா மன்னா"என்று கண்ணகி பாண்டியனைக் குறிப்பிட காரணம் என்ன?
மன்னருக்கு ஆராய்ச்சி அறிவு இன்றியமையாதது;மேலும்,தன் அமைச்சர்களோடு ஆஈராய்ந்து அவர்கள் எடுத்துக்காட்டும் நீதி முறைகளின்படி செயல்பட வேண்டும்.ஆனால்,பாண்டிய மன்னனோ தானும் ஆராய்ந்து பார்க்கவில்லை தன் அமைச்சர்களோடும் கலந்து ஆராயவில்லை பொற்கொல்லன் சொன்னவற்றை கேட்டு,கோவலனைக் கள்வனென்று கருதினான்,அவரனக் கொன்று விடுமாறு உத்தரவிட்டான் ஆதலால் கண்ணகி "ஆராய்ச்சிதிறன் அற்றஅரசனே "! என்று கூறினாள்.
12."யானோ அரசன்",யானே கள்வன், தென்புலம் காவல் எனமுதல் பிழைத்தது"எனபதனை விளக்குக?
தான் பொற்கொல்லன் சொற்கேட்டு நீதி தவறிக் கோவலனைக் கொல்லச்செய்தமையால் தான் அரசனாய் இருத்தற்குத் தகுதியற்றவன் என்று கருதிப் பாண்டியன் "யானோ அரசன்"என்றான்.
கோவலனைக் கொன்றுவஞ்சனையாய்ச் சிலம்பைக் கவர்ந்தமையால் அவன்"யானே கள்வன்"என்றான்.
பாண்டியரது மரபில் முன்பு ஆட்சி புரிந்த எம்மன்னரும் முறை தவறினார் இலர்;முதன் முதலில் வழி தவறியது தானே ஆதலாலும் அப்பழி தன் வழிவருவோரைச் சென்று சேருமாதலாலும் பாண்டியன்,"தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது என்றான்.
13.தாழ்ந்த குடையன,தளர்ந்த செங்கோலன் என்று பாண்டியன் தன்னைக் குறிப்பிட்டதன் பொருளைக் கூறுக?
குடிகளை முறையினின்றும் வழுவாது அருளோடு காப்பதற்கு அடையாளமாய் அரசனுக்கு வெண்குடை அமைந்திருக்கும்.அதேபோல்,அரசர் தம் குடிகளை நடுவுநிலைமையோடு முறை தவறாது ஆட்சிபுரிவதற்கு அடையாளமாய்ச் செங்கோலைக் கொண்டிருப்பார்.ஆனால் பாண்டியன் பொற்கொல்லன் சொற்கேட்டு அருளின்றியும்,நLடுவுநிலைமையுன்றியும்,முறை தவறிக் கோவலனை கொன்றான்.அதனால் அவன் குடைக்குத்தாழ்வு ஏற்பட்டது.அவன் செங்கோல்தளர்ந்தது,எனவே,அவன்,தன்னைத்"தாழ்ந்த குடையன்,தளர்ந்த செங்கோலன் "என்றான்.
14.சிலப்பதிகாரம் உணர்த்தும் "காதை"பற்றி கூறுக.
மதுரையில் கணவனை இழந்த கண்ணகி,பாண்டிய மன்னன் முன்பு சென்று,அவன் கோவலனைக் கொல்வித்து முறையன்று என்பதைக் தக்க சான்றோடு நிறுவி,அரசனோடு வழக்குரைத்து வென்ற செய்தியையும் தன் தவறு உணர்ந்து மன்னன் உயிர் நீத்ததையும் உணரத்துவது."காதை கதையைக் கொண்ட காட்டு".,இக்காதை,இரண்டாவதாகிய மதுரைக்காண்டத்துள் பத்தாவது காதையாகும்,"
15.மனு வேந்தன் தாய்ப்பசுவுக்கு நீதி கூறியதை விளக்குக.
பசுவின் கன்று,மனுமைந்தன்தேர்காலில் சிக்கி மாண்டது.அதனை அறிந்த மனுவேந்தன் தன் ஒரே மைந்தன் மீது தானே தேரைச் செலுத்திக்கொன்று மனுவேந்தன் தாய்ப்பசுவுக்கு நீதிகூறினார்.
16.சிலப்பதிகாரம் காட்டும் சோழநாட்டு மன்னர்களின் சிறப்புகளை கூறுக.
சோழமன்னர்களின் சிறப்பு;
சோழநாட்டு மன்னர்களுள் ஒருவன் சிபி சிச்சக்கரவர்த்தி.அவன் எல்லாஉயிர்களையம் தன்னுயிர் போல் காப்பவன்.அவன் தன்னிடம்அடைக்கலம் புகுந்த புறாவிற்கு ஈடாய்த்தன் உடல் தசைகளை அரிந்து துலைத்தட்டில் வைத்தான்எவ்வளவு வைத்தாலும் புறாவின் எடைக்கு ஈடாகாமையால் தானே துலைத்தட்டில் ஏறிநின்றுஎடையை ஈடாக்கினான்.இத்தகைய சிறப்பினை உடையவன் சோழ மன்னன்.
17.இரட்டைக்காப்பியங்கள் யாவை?ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது விளக்குக.
இரட்டைக்காப்பியங்கள் என்பவை சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் ஆகும்.இவ்விரு நூல்களும் காலத்தாலும்,கதைத்தொடர்பாலும் பாவகையாலும் ஒன்றுபட்டு காணப்படுவதால் இதனை இரட்டைக்காப்பியம்"என வழங்குவர்.
18.பாரதியார் இளங்கோவை எவ்வாறு புகழந்து பாடியுள்ளார்?
பாரதியார்"யாமறிந்த புலவரிலேகம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"என்று இளங்கோவைப் புகழந்துள்ளார்.